"அனுமதி இல்லை.."தடுத்து நிறுத்திய வனத்துறை - ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேரில் சந்தித்து உரையாடினார். முன்னதாக ஜான்பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர் 5 வாகனங்களில் மாஞ்சோலைக்கு சென்றனர். மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி, வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வனத்துறையினருடன், ஜான் பாண்டியன் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 5 கார்களும் அனுமதிக்கப்பட்டது.
Next Story