பிரியாவிடை நேரத்தில் பாதிரியார் த*கொலை..சில நாட்கள் முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

நெல்லை வள்ளியூர் புனித பாத்திமா அன்னை கத்தோலிக்க தேவாலய உதவி பங்குத் தந்தை தூக்கிட்ட நிலையில் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் அரக்கோணத்தை சேர்ந்த ஆரோக்யதாஸ் உதவி பங்குத் தந்தையாக ஓராண்டாக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் தனது பயிற்சியை நிறைவு செய்த ஆரோக்யதாஸ் சென்னை பொன்னேரியில் உள்ள ஆலயத்திற்கு பணி மாறுதலில் செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு அவர் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆரோக்கியதாசின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டை பையில் இருந்து 7 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. வழியனுப்பு விழா நடக்கும் நேரத்தில் தற்கொலை செய்ய காரணம் என்ன? வேறு ஏதேனும் பிரச்னை இருந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு வள்ளியூரில் உள்ள தேவாலயத்தில் ஆராதனை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய ஆரோக்ய தாஸை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கி அவரது செல்போனைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரோக் யதாஸ் போலீசில் புகாரளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்