"2 நாள் பழைய சிக்கன் தான் ஓனர் ஓபன் ஸ்டேட்மென்ட்" -நெல்லையில் அதிர்ச்சி

x

மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், தனது குடும்பத்தினருடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்திருக்கும் பிரபல அசைவ உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். தந்தூரியில் துர்நாற்றம் வீசி உள்ளது தொடர்பாக கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தவறுதலாக வந்துவிட்டதாக கூறி இருக்கிறார். பின்னர் கடை உரிமையாளரிடம் போன் செய்து புகார் செய்துள்ளார். அப்போது ஊழியரிடம் தொலைபேசியை கொடுக்க சொல்லி உரிமையாளர் பேசி உள்ளார். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்னால் தயார் செய்த சிக்கனை கொடுத்ததாக ஊழியர் பதிலளித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலட்சியம் காட்டுவதாக கூறிய வாடிக்கையாளர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்