சரசரவென புகுந்த கும்பல்.. அதிர்ச்சியில் கடை ஓனருக்கு நெஞ்சுவலி - நெல்லையில் பகீர்
சரசரவென புகுந்த கும்பல்.. அதிர்ச்சியில் கடை ஓனருக்கு நெஞ்சுவலி - நெல்லையில் பகீர்
திருநெல்வேலி டவுனில் பட்டாசு கடையில் நடந்த தகராறில் 5 பேர் கொண்ட கும்பல் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமோதரன் என்பவர் நடத்தி வரும் பட்டாசு கடைக்கு அதிகாலை 2 மணிக்கு வந்த அந்த கும்பல், பட்டாசு பெட்டிகளை எடுத்துக் கொண்டு, பணம் தராமல் கடை உரிமையாளரை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் தகராறு ஏற்படவே, கடை உரிமையாளரைத் தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற தாமோதரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story