வெளியான நெல்லை மாவட்ட வெள்ள சேத விவரங்கள்
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், 840 நியாய விலை கடைகளில் 63 கடைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைகளில் இருந்த ரேஷன் பொருட்கள் முழுவதும் சேதம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆயிரத்து195 பள்ளிகளில் ஆயிரத்து108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், 4 ஆயிரத்து 424 நபர்கள் மீட்கப்பட்டு, 65 நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 11 ஆயிரம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்....
Next Story