கல்வித் துறை இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி... ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்

x

கல்வித் துறை இயக்குனர்களுடன் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். எமிஸ் இணையதள பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ஆம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று தொடக்கக் கல்வித் துறையைச் சேர்ந்த 11 ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்தன. அந்த சங்கங்களின் நிர்வாகிகளுடன் கல்வித் துறை இயக்குனர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்