தத்து எடுத்து வளர்த்த மகன் கொடுத்த பெருமை...நினைத்து நினைத்து கண்ணீர் விடும் தாய்

x

தத்து எடுத்து வளர்த்த தங்கை மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தாய் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளி பாக்கியம். தனது தங்கை செல்வியின் குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் அவரது மகன் சுரேந்திரனை பாக்கியம் தத்து எடுத்து வளர்த்து வந்தார். அரசு பள்ளியில் படித்த அவர் நீட் தேர்வில் 545 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. இதனால் வளர்ப்பு தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்