"முதல் முறை தோல்வி - ஒரு வருடம் விடாபிடியாக படித்தேன்" 7.5 % இட ஒதுக்கீட்டில் டாக்டராகபோகும் மாணவர்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் சதீஷ். எளிய குடும்ப பின்னணியை கொண்ட இவர், நீட் தேர்வில் 515 மதிப்பெண்கள் எடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருப்பூர் மருத்துவக்கல்லூரியில் சேர உள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த இவர், ஒரு வருடம் பல இன்னல்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story