செங்கற்சூளையில் வேகும் தாய்.. ஆடு மேய்த்த மகன் இப்போ டாக்டர்..தடைகளை தவிடுபொடியாக்கிய வைராக்கியம்

x

செங்கற்சூளையில் வேகும் ஏழைத் தாய்

ஆடு,மாடு மேய்த்த மகன் இப்போ டாக்டர்

தடைகளை தவிடுபொடியாக்கிய வைராக்கியம்

அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கிறது. எளிமையான வாழ்க்கையில் இருந்தபோதிலும் அவர்களை கனவு நோக்கி அழைத்துச் சென்றது எது? பார்க்கலாம் விரிவாக..

ஆடு மேய்த்துக்கொண்டே அரசுப் பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர் , கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இருக்கிறார்...

செங்கற்சூளை சூட்டில் வெந்து... தன்னை படிக்க வைத்த தாயை, கல்வி என்னும் பேராயுதத்தால் மகன் ஆசுவாசப்படுத்தி இருப்பது மனதை நெகிழச் செய்கிறது..

அதுவும் தன்னுடன் படித்த, தன் கிராமத்தை சேர்ந்த தோழனுடன் சேர்ந்து மருத்துவம் படிக்க இருக்கிறார் இந்த மாணவர்...

பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் இருந்து இரு மாணவர்கள் மருத்துவராக போவதை எண்ணி ஒரு கிராமமே பெருமிதத்தில் மூழ்கி கிடக்கிறது...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கமலைக் கிராமம்தான் வருங்கால இரு மருத்துவர்களின் தாயகம்...

அதில் ஒருவர்தன் இந்த நாகராஜ்...

மாற்றித்திறனாளியான இவர், பேருந்து வசதி இல்லாத தன் கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் சென்று படித்து வந்திருக்கிறார்...

நாகராஜின் தந்தை பெரியசாமி ஒரு விவசாயி..

தாய் விஜயா, செங்கற்சூளையில் கூலித் தொழிலாளி..

இந்த சூழலில்தான், பெற்றோருக்கு ஆதரவாக மாட்டு கொட்டகையை கவனித்துக் கொண்டும், ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டும் அருகில் உள்ள பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த நாகராஜ், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக இருக்கிறார்...

நாகராஜூடன் சேர்ந்து இதே கமலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழியான உடையப்பன் என்பவரின் மகன் ரவியும் மருத்துவராக இருக்கிறார்..

தன் இளம் வயதிலே புற்று நோயால் தாயை பறிகொடுத்த ரவி, பின் மருத்துவராகும் லட்சியம் கொண்டு படித்து வந்த நிலையில், அவரின் கனவும் நிறைவேறி இருக்கிறது...

மாணவர்களின் இந்த வளர்ச்சியில், பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பங்கை மறந்து விடக் கூடாது...

அவர்கள் விதைத்த விதையில் இருவர் முளைத்திருக்கும் நிலையில், இன்னும் பல நாகராஜையும், ரவியையும் அவர்கள் உருவாக்க இருக்கிறார்கள்...

அசாத்தியக் கனவு என்றே சொல்லிப் பழக்கப்பட்ட வந்த மருத்துவர் கனவை... கடைக்கோடி கிராமத்தில் இருந்து, அதுவும் சாமான்ய குடும்பத்தில் இருந்து வந்து இருவர் அடைந்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் குளிரச் செய்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்