உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வரும் மாற்றம்? நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாகின. இதில் தவறான அடிப்படையில் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட ஆயிரத்து 563
பேரின் தேர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு வரும் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டு, 30ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால் தேசிய அளவிலான தரவரிசை மதிப்பெண்களில் மீண்டும் மாற்றம் ஏற்படும்
நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு மாநில வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை, தேசிய தேர்வு முகமை அனுப்பி வைக்கும். ஜூலை முதல் வாரத்தில் இந்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து ஆன்லைன் வழியில் விண்ணப்பங்களை பெறும் பணிகள் அனைத்தையும் முடித்து, கலந்தாய்வு துவங்க ஜூலை இறுதியாகி விடும்
என மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.