அரசு பள்ளி டூ மருத்துவ கல்லூரி.. ஏழ்மையிலும் சாதித்து காட்டிய கிராமத்து மாணவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏழ்மை நிலையிலும் கல்வி பயின்ற மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். காந்திநகர் பகுதியை சேர்ந்த மாணவிகள் தாரணி மற்றும் காயத்ரி ஆகியோர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், இருவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தினர். இதுகுறித்து பேசிய மாணவிகள் தாரணி மற்றும் காயத்ரி, மருத்துவம் பயில்வது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
Next Story