ஏழ்மை வீட்டில் இருந்து நீட்டில் சாதனை - தழுதழுத்த குரலில் பேசிய மாணவி

x

தரங்கம்பாடி ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் சந்திரோதயா நீட் தேர்வில் வென்று நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

10, 12ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பிடித்த சந்திரோதயா, ஏழ்மையான குடும்ப சூழலில் மருத்துவம் படிக்கும் ஆசையில் நீட் தேர்வுக்கு படித்துள்ளார். கூரை சரியாக இல்லாத வீட்டில், மழையிலிருந்து தப்பிக்க தார்ப்பாய் போட்டிருக்கும் வீட்டிலிருந்து, 2 முறை தேர்வு எழுதிய போது அவருக்கு போதிய மார்க் கிடைக்கவில்லை. ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் மருத்துவம் தான் படிக்க வேண்டும் என்ற வேட்கையோடு வீட்டிலிருந்து படித்து 3 ஆவது முறை வெற்றியை வசமாக்கினார். நீட் தேர்வில் 492 மதிப்பெண்களை பெற்ற சந்திரோதயாவுக்கு நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் மட்டுமே தனக்கு மருத்துவப் படிப்பு சாத்தியமாகியது என சொல்லும் சந்திரோதயா, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 10 % ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்