நீட் பற்றி எழுந்த கேள்வி.. தர்மேந்திர பிரதான் கொடுத்த பதில்

x

2010 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வந்தவர்கள் இன்று அரசியலுக்காக அதை வேண்டாம் என்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேசியபோது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நீட் விவகாரம் குறித்து பேசும்போது, பிரதமர் மோடி அவையில் இல்லாதது துரதிஷ்டவசமானது என்றார். நீட் தேர்வால் பல மாநிலங்களிலும் பிரச்சினை என்றவர், நீட் தேர்வை தொடக்கம் முதல் தமிழகம் எதிர்க்கிறது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பாஜக கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுமா? என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான், 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருக்கும்போது மருத்துவப்படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுவை நடத்த முடிவு செய்தவர்கள் இன்று அரசியலுக்காக மற்றவர்கள் மீது கை நீட்டுகிறார்கள் என குற்றம் சாட்டினார். மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வை நடத்த 2 முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுபடி தேர்வு நடப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்