அரசு பள்ளியில் நீட் பயிற்சி தாமதம்
நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் நீட் தேர்வு பயிற்சி தொடங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது...அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், 7 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில், ஆண்டுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நீர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் உரிய காலத்தில் தொடங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பயிற்சி வகுப்பை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story