அரசு பள்ளியில் நீட் கோச்சிங்..? பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 30 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் 7000 இடங்கள் வரை இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இந்த மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நவம்பர் முதல் வாரத்தில் இருந்து துவங்க இருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல் கட்டமாக நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்கள் இம்மாத இறுதிக்குள் சேகரிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் இருந்து, வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த அரசு பள்ளிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் மூலம் இந்த பயிற்சிகளை அளிப்பதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
Next Story