``ஆதரவு இல்லை'' - பாஜக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சி
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள் செய்வது முற்றிலும் தவறானது என பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், அரசு நியமனங்களில் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றப்பட வேண்டும் என்றார். மத்திய அரசின் Lateral Entry-க்கு தானும், தனது கட்சியும் ஆதரவாக இல்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமே எதிர்ப்பு தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Next Story