வீடுகளுக்குள் குமட்டிய வாடை.. உள்ளே போக முடியாமல் தவிப்பு - நாமக்கல்லில் அதிர்ச்சி
நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டில் உள்ள கணபதி நகரில் தொடர்மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியது. சுமார் 15 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் மோட்டார் பழுதால், கழிவுநீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை காலங்களில் இதுபோன்று மழைநீர் வீடுகளுக்குள் உட்புகுவது வழக்கம் எனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே நகராட்சி நிர்வாகம் பொக்ளைன் இயந்திர உதவியுடன் தற்காலிக வாய்க்கால் தோண்டப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது.
Next Story