தஞ்சை பெரிய கோயிலில் ராஜ வீதிகளில் உலா வந்த நடராஜ பெருமாள்

x

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. கோயிலில் உள்ள சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெரிய கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து, நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக நெல்மணிகளை பக்தர்கள் மீது தூவினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நெல்மணிகளை எடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்