ஜாதி மோதல்... நெல்லையில் மேலும் 60 பள்ளிகளில் ஆசிரியர்களை மாற்ற திட்டம்?

x

நெல்லை மாவட்டத்தில், மாணவர்களின் மோதல் போக்கை தடுக்க தவறியதாக மேலும் 60 பள்ளிகளில், ஆசிரியர்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மருதகுளம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை டவுன், ராதாபுரம், வள்ளியூர், கங்கை கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள் மோதல் நடக்கும் பள்ளிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்களை கூண்டோடு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்குநேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியில் இருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களின் மோதல் போக்கை தடுக்க தவறியதாக மேலும் 60 பள்ளிகளில், ஆசிரியர்களை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்