2 பேரை பாதித்த உயிர்கொல்லி நோய் - வீடு வீடாக சல்லடை போடும் கலெக்டர்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உமா, வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்தனூர் பேரூராட்சியில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, ஆட்சியர் உமா, அத்தனூர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, கொசு உற்பத்தியாகும் வகையில் சூழல் இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். தினந்தோறும் பளீச்சிங் பவுடரை தெளிக்குமாறு சுகாதார பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
Next Story