விளையாடிய 10 வயது சிறுமியை கொடூரமாக வெட்டிய IT ஊழியர் - எது உண்மை? பகீர் தகவல்கள்
விளையாடிய 10 வயது சிறுமியை
கொடூரமாக வெட்டிய IT ஊழியர்
பார்க்கும் வேலையே சைக்கோவாக மாற்றியதா?
எது உண்மை? பகீர் தகவல்கள்
10 வயது சிறுமி உட்பட மூவரை அரிவாளால் வெட்டிய இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் மீதும் இந்த விவகாரத்தின் மீது பகீர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்சிஏ பட்டதாரி ஒருவர், பெங்களூருவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அதிக சத்தங்களை தொடர்ந்து கேட்டு இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக அதற்கான சிகிச்சையையும் அவர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வொர்க் ஃப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்த இளைஞர், அருகே குழந்தைகள் சத்தம் போட்டு விளையாடி கொண்டு இருந்தால் ஆத்திரமடைந்ததாக கூறப்பட்டது. இதில், 10 வயது சிறுமியை அரிவாளால் வெட்டிய அவர், தடுக்க வந்த இருவரையும் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து படுகாயமடைந்த மூவரையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இளைஞர் மன நலம் பாதிக்கப்பட்டவர் இல்லை எனவும், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், பெற்றோரிடம் தெரிவிக்க முயன்ற சிறுமியை அவர் அரிவாளால் தாக்கியதாக உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். தொடர்ந்து, மன நலம் பாதிக்கப்பட்டதை காரணமாக முன்வைத்து இளைஞரை தப்பிக்க விட்டு விடக்கூடாது எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.