ஒரே வீடியோ.. ரூ.2 லட்சத்துக்கு சூனியம் வைத்த சிறுவன்
நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறி சிறுவன் புல்லட் பைக்கை ஓட்டியுள்ளார். தமிழகத்தில் சிறார்கள் வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் வாகனத்தை வழங்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்லை சேர்ந்த சிறுவன் புல்லட் பைக்கை ஓட்டி அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story