பெட்டிக்கடையில் அசிங்கப்பட்ட மும்பை ரவுடி? அவமானம் தாங்க முடியாமல் செய்த சம்பவம்
பெட்டிக்கடையில் அசிங்கப்பட்ட மும்பை ரவுடி? அவமானம் தாங்க முடியாமல் செய்த சம்பவம்
சுப்பிரமணிய புரம் படத்தின் இந்த காட்சியைப் போலவே, நாமக்கல் கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மும்பையில் தான் பெரிய ரவுடி என்று கூறி சிகரெட் கேட்டுள்ளார். ஆனால், "காசு கொடுத்தால்தான் சிகரெட்" என்று கடைக்காரர் தடாலடியாக சொல்லிவிட, மணிகண்டனுக்கு அவமானமாக போய்விட்டது. இதற்கு பழிவாங்க எண்ணிய மணிகண்டன், தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து,10 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். தற்போது, மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான மூவரில் ஒருவருக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story