நாமக்கல் என்கவுன்ட்டர்... அதே சாலையில் ஆளில்லாமல் சீறி பாய்ந்த பைக்... `திகில் ' வீடியோ..!

x

ஜித்தன் பட பாணியில் சாலையில் தனியாக சென்ற இருசக்கர வாகனத்தின் திகில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பீதியை கிளப்ப, சம்பவத்தின் பின்னணி நடுநடுங்கச் செய்கிறது. என்ன நடந்தது ? யாருமில்லாமல் இருசக்கர வாகனம் இயங்கியது எப்படி ? என்பதை பார்க்கலாம் விரிவாக...

ஆளே இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று சாலையில் சென்ற திகில் வீடியோவைக் கண்டு திகைத்தனர் பொதுமக்கள்...

அமானுஷ்யமாக இருக்குமோ என பலர் திகைத்து போய் விழி பிதுங்க.. சம்பவம் நடந்த சாலை பகுதியில் தான் கடந்த வாரம் கேரளா ஏடிஎம் கொள்ளையர்கள் தங்கள் கண்டெய்னர் வாகனத்தை ஓட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

யாருமே இல்லாத நிலையில் இருசக்கர வாகனம் செல்வதை கண்ட உள்ளூர் வாசிகள், பேய், பிசாசு தான் என அடித்துக் கூற...சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போதே தெரியவந்தது சேதி...

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள மக்கிரிபாளையம் பிரிவு சாலையில் மோடமங்கலத்தில் இருந்து சௌந்தரராஜன், நந்தினி தம்பதியினர் பள்ளிப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சங்ககிரியில் இருந்து வந்த மாருதி எர்டிகா கார் தம்பதி வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.. உடனே தம்பதி இருவரும் உயிரை காத்துக் கொள்ள பைக்கில் இருந்து கீழே குதிக்க...ஆக்சிலரேட்டர் கொடுத்த வேகத்தில் சிறிது தூரம் ஆளே இல்லாமல் ஓடியது அவர்கள் வந்த பைக்...

இந்த சம்பவத்தை கண்ட பலர் மிரண்டு போன நிலையில், பைக்கில் இருந்து கீழே விழுந்த தம்பதி இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இணையத்தை ஆட்டிப்படைக்க, ஜித்தன் பட காட்சியை ஒப்பிட்டு தங்கள் பங்கிற்கு சிலர் பீதியை கிளப்பினர்..

இந்நிலையில் முழுக்க முழுக்க விபத்தால் நேர்ந்ததே என தெரியவந்துள்ள நிலையில், விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. அதேநேரம் இந்த வெப்படை காவல் நிலையம் அருகே அதே இடத்தில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்கள் தங்கள் கண்டெய்னர் வாகனத்தில் சென்ற காட்சிகளும் வெளியாகி இருக்கிறது..

அடுத்தடுத்த இரு சம்பவங்களால் வெப்படை காவல் நிலையம் கவனம் பெற்றிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்