கொளுத்தும் வெயில்... ரோட்டோரத்தில் வீசிய துர்நாற்றம் - ஷாக்கில் மக்கள்

x

நாமக்கல்லில் இறந்த கோழிகளை சாலையோரம் வீசிச் சென்ற நிலையில், அவை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன. நாமக்கல் புதுச்சத்திரம் மேம்பால பிரிவு அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்த நிலையில் வீசிச் செல்லப்பட்டன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இத்தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ், கோழிகள் அனைத்தையும் மொத்தமாக பெட்ரோல் ஊற்றி எரித்தார். இது குறித்து கூறிய அவர், வெயில் காரணமாக கோழிகள் உயிரிழப்பதாகவும், அவ்வாறு இறந்த கோழிகளை பண்ணையிலேயே புதைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு வீசிச் சென்றவர்கள் யாரென தெரியவில்லை எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்