வெளியான முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பிளான் | Cm Stalin | Namakkal

x

நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் 810 கோடி ரூபாய் மதிப்பீலான முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். சேலம் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லிற்கு வரும் முதலமைச்சர், பரமத்தி சாலையில் அமைந்துள்ள, சிலம்ப கவுண்டர் பூங்காவில் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை நண்பகல் 12 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார். பின்னர் சுற்றுலா மாளிகையில் தங்கி உணவு அருந்திவிட்டு, 3 மணிக்கு பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கவுள்ளார். விழாவில், 810 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, அரசு சட்டக்கல்லூரி, கலைஞர் புதிய பேருந்து நிலையம், நவீன பால்பதன ஆலை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவில், சுமார் 16,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், 2200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்