தமிழக அரசியலை பரபரக்க வைத்தநெல்லை எக்ஸ்பிரஸ் சம்பவம் - நயினாருக்கு பேரிடியாக வந்த சேதி

x

தமிழக அரசியலை பரபரக்க வைத்தநெல்லை எக்ஸ்பிரஸ் சம்பவம் - நயினாருக்கு பேரிடியாக வந்த சேதி

தலையெழுத்தையே மாற்றுமா? தீர்மானிப்பது எது?

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது. அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

மக்களவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடு பிடித்துருக்கும் நிலையில், இண்டு இடுக்கெல்லாம் பறக்கும் படையினர் பரபரத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்ட

தேர்தல் பறக்கும் படையினரிடம், 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகிய மூன்று பேர் சிக்கினர்.

இதில் சதீஷ் என்பவர் நெல்லையில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலின் மேலாளர் என்றும், நவீன் சதீஷின் சகோதரர், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூவரும் கைது செய்யப்பட்டு, தாம்பரம் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட நிலையில், 10 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை அதிகாரிகளே விசாரணை செய்வார்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் உள்பட, தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை அளித்தார்.

இதேபோல், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில், நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனின் நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் இல்லத்தில் அடுத்தடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் கணேஷ் மணி, குணசேகரன் ஆகிய இருவர் இல்லத்தில் நடந்த சோதனையில் 5 லட்சத்து 72 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட நயினார் நாகேந்திரன், தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்