மாணவியிடம் காம முகத்தை காட்டிய கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் - இழுத்து சென்ற போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், கலை ஆசிரியராக ராஜஸ்தானை சேர்ந்த ராமச்சந்திர சோனி பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ராமச்சந்திர சோனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அத்துடன், இது குறித்து மாவட்ட குழந்தை நல அதிகாரிக்கு தகவல் கொடுக்க தகவல் கொடுத்தார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.