சீறிப் பாய்ந்த நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில்... அனுபவத்தை பகிர்ந்த மக்கள்
நாகர்கோயில்- சென்னை இடையே, வந்தே பாரத் ரயில் தினசரி ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் முதல் நாளான திங்கள்கிழமை சேர் கார்களில் 80 சதவீத பயணிகளும் எக்சிகியூட்டிவ் பெட்டிகளில் 50 சதவீத பயணிகளும் நிரம்பியுள்ளன. சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தினசரி சேவையாக மாற்றப்பட்ட பிறகு நாகர்கோயிலில் இருந்து முதல் சேவையை தொடங்கியது. இந்த வழித்தட ரயில் சேவையில் எப்போதும் காத்திருப்பு பட்டியலே காணப்படும் நிலையில், இதே வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவது பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
Next Story