அலைக்கழித்த நிதி நிறுவனம்..குடும்பத்துடன் நியாயம் கேட்ட நபர் - பரபரப்பு காட்சிகள்

x

அலைக்கழித்த நிதி நிறுவனம்..குடும்பத்துடன் நியாயம் கேட்ட நபர் - பரபரப்பு காட்சிகள்

நாகர்கோவிலில், வாங்கிய கடனை அடைத்த பிறகும் சொத்து பத்திரத்தை தராமல் அலைக்கழித்த தனியார் நிதி நிறுவனத்தில் அமர்ந்து ஒரு குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ். இவர் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 20 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் தொகையை வட்டியுடன் செலுத்திய பிறகும் சொத்துப் பத்திரத்தை திருப்பித் தர மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அலைக்கழித்து வந்ததால் சுனில்ராஜ் குடும்பத்தினருடன் நிதி நிறுவனத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த வடசேரி போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் இரு தினங்களில் பத்திரத்தை கொடுப்பதாக நிதி நிறுவன மேலாளர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்