கடல் வழியாக ராமேஸ்வரம் டூ சென்னை வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

x

கடல் வழியாக ராமேஸ்வரம் டூ சென்னை வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

மாற்றுத்திறனாளிகளான 15 மாணவர்கள் பங்குபெறும், 604 கிலோமீட்டர் தொலைவிலான கடல்வழி நீச்சல் பயணம், கடந்த 5-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கியது. உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை வரை இந்த நீச்சல் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொண்டி, காட்டுமாவடி வழியாக கடலில் நீந்தியபடி, 15 பேரும் வேளாங்கண்ணி கடற்கரையை சென்றடைந்தனர். தமிழ்நாடு மீனவர் பேரவையினர் மற்றும் வேளாங்கண்ணி மீனவர்கள் சார்பில், 15 பேருக்கும் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்