அளிக்கப்பட்ட உறுதி - தொடர் உண்ணாவிரதம் வாபஸ்

x

சி.பி.சி.எல். எண்ணைய் ஆலைக்கு நிலம் வழங்கியவர்கள் தொடர்ந்து11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சி.பி.சி.எல். எண்ணைய் ஆலைக்கு நிலம் வழங்கியவர்கள், தங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணம் கேட்டு கடந்த 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நில அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை, சி.பி.சி.எல். அதிகாரிகளை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். கிராம மக்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், நாகையில் தாசில்தார், டி.எஸ்.பி, உள்ளிட்டோர் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் நிலம் வழங்கிய தகுதியுள்ள உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று, பிள்ளை பனங்குடி கிராம மக்கள் பதினோராவது நாளாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்