விண்ணை கிழித்த மேள தாளம்... Vibe-ஆகி குத்தாட்டம் போட்ட பக்தர்கள் | Nagai | Thiruvizha
நாகை, அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட 9, புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் யானையில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாதஸ்வர இசையுடன், கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம் சிலம்பாட்டம் கும்மியாட்டம் என ஊர்வலம் களை கட்டியது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Next Story