வளர்ப்பு மகள் ஈன்றெடுத்த குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த ராதாகிருஷ்ணன்

x

நாகையில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி கோரத்தாண்டவத்தின்போது, கீச்சாங்குப்பம் மற்றும் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள் அப்போது ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து 2 குழந்தைகளையும் நாகையில் உள்ள காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டு, குழந்தைகளுக்கு செளமியா மற்றும் மீனா என பெயர் சூட்டினார். சௌமியாவும், மீனாவும் 18 வயது எட்டியபோது காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்ததால், அப்போது சுகாதாரச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அனுமதியோடு, நாகை கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி- மணிவண்ணன் தம்பதியினர், சௌமியா மற்றும் மீனாவை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். எனினும் படிப்பு மற்றும் திருமணத்திற்கு, பெற்றோரைப்போல் ராதாகிருஷ்ணன் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இதனிடையே, சௌமியாவுக்கும், சுபாஷ் என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு நாகையில் திருமணம் நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி சௌமியா பெண் குழந்தையை ஈன்றெடுத்த நிலையில், தகவல் அறிந்து குடும்பத்துடன் நாகை சென்ற உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சௌமியாவை ஆசீர்வதித்து குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்