`மை வி3 ஆட்ஸ்' விவகாரம்... பிரபல யூடியூபர் மீது பெண்கள் பரபரப்பு புகார்

x

தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்வர்ணம் மற்றும் பேபி ஆகிய இரு பெண்கள், மை வி3 ஆட்ஸ் செயலி மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. முதல் இரண்டு மாதங்கள் மட்டும் சொன்னது போல் 24 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாகவும், பின்பு பணம் வாராததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறிய இருவரும், மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் மீது வழக்கு தொடுத்தனர். தொடர்ந்து, சக்தி ஆனந்தன் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்த நிலையில், வழக்கை கையிலெடுத்த, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சக்தி ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சக்தி ஆனந்தன் மீது புகாரளித்த இரு பெண்களையும் வழக்கை வாபஸ் பெறக்கோரி பலரிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததாக கூறப்பட்டது. இதில், யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், பெண்கள் இருவர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் தவறான ஆதாரங்களுடன் பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெண்கள் இருவரும், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்