#JUSTIN || MYV3 ads மோசடி விவகாரம்..?கோவையில் திரண்ட 5000பேர்..சாட்டையை சுழற்றிய போலீஸ் | Tamilnadu

x

MY V3 ads என்ற நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் வழங்குவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் விதமாக செயல்படுவதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இதைக் கண்டித்து தமிழகம், ஆந்திரா ,கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அந்த நிறுவனத்தின் சேர்ந்தவர்கள் கோவை நீலாம்பூர் புறவழிச் சாலை பகுதியில் நேற்று குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அளித்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் அனுமதி இன்றி 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நீலாம்பூர் புறவழிச்சாலை பகுதியில் குவிந்தது குறித்து இருகூர் விஏஓ ராமசாமி சிங்காநல்லூர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்,

சிங்காநல்லூர் போலிசார் MY V3 ads நிறுவனத்தின் மீது

வழக்கு பதிவு செய்தனர்.

சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்று சேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MY V3 ads நிறுவனத்தினர் மீது இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்