ரிலீஸான உடனே கிளப்பிய பரபரப்பு.. `My V3 Ads' சேனலில் சக்தி ஆனந்தனின் ஆடியோ

x

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி3 ஆட்ஸ் நிறுவனம், யூடியுப்பில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சக்தி ஆனந்தன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இதனிடையே, சக்தி ஆனந்தனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்க நிலையில், சக்தி ஆனந்தன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டதை அடுத்து, கோவை மத்திய சிறையில் இருந்து சக்தி ஆனந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்