"கொட்டோ கொட்டுனு கொட்டும் பணம்.. எங்களுக்கு வரலனு யார் சொன்னா!தமிழகத்தை அலறவிடும் யூடியூப் விவகாரம்
கோவையை தலைமையிடமாகக் கொண்டு Myv3 Ads என்ற செயலி செயல்பட்டு வருகிறது. அதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் ஆசைவார்த்தைகள் கூறி மோசடியில் ஈடுபடும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொய்யான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.