ECR-ல் இறந்தவர் உடல் ஹாஸ்பிட்டலுக்கே தெரியாமல் வீட்டுக்கு சென்ற மர்மம் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டில், சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது...

வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர், கிழக்கு கடற்கரை சாலை அருகே கார் மோதியதில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குப்புசாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, உடற்கூராய்வு மேற்கொள்ள வேண்டுமென அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, குப்புசாமியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாமல் அவரது உடலை எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரது உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்