கோயில் கருவறையின் பூட்டை உடைத்து அம்மனின் நகைகளை திருடிய மர்ம நபர்கள்.. வலைவசி தேடும் போலீஸ்..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசம்பாளையம் பகுதியில், அமைந்துள்ளது அத்தனூர் அம்மன் கோயில். இன்று அதிகாலை வழக்கம்போல பூசாரி கோயிலை திறந்து பார்த்த போது கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளும், 7000 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரனை நடைத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story