கடையின் பூட்டை உடைத்துரூ.8 ஆயிரம் திருடிய மர்ம நபர்
மதுரை வாடிப்பட்டியில் தனியார் உணவகத்தின் கதவை உடைத்த மர்ம நபர், உள்ளே இருந்த பணத்தை திருடி சென்ற சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது. வாடிப்பட்டியிலுள்ள நான்குவழிச்சாலையில் மூர்த்தி என்பவர் உணவகம் நடத்தி வரும் நிலையில் இரவு வழக்கமாக தனது உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கடையில் இருந்த 8 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், பணத்தை எடுத்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்..
Next Story