காற்றில் கலந்த மர்ம வாயு..! துடிதுடித்த பிராணம்.. தேனியில் பயங்கரம்

x

லோயர் கேம்பில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட தொட்டிகள் அமைத்து அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கம்பம் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியில், தொழிலாளர்கள் சுத்திகரிப்பு பணியினை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக குளோரின் வாயு கசிந்ததில் ஒப்பந்த பணியாளர் முத்தீஸ்வரன் என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அப்பகுதியில் வசித்து வருபவர்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நிலைமையை சரி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்