15 நாட்களாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் மக்கள்

x

குளித்தலை அருகே மர்ம காய்ச்சலால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணக்கப்பிள்ளையூர், முதலிகவுண்டனூர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குளித்தலை, கரூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதிகளில் ஆய்வு நடத்தி காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்