இரவில் வீடுகளை நோட்டமிடும் மர்ம ஆசாமி... கதிகலங்க வைத்த சிசிடிவி காட்சி - மக்களே உஷார்..!

x

நெல்லை வீரவநல்லூரில் டேவிட் என்பவருக்கு சொந்தமான உணவகத்தின் மேற்கூரைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்... தொடர்ந்து புதுமனை தெருவிலுள்ள ஜெய்லாணி என்பவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை எடுத்து அதே வாகனத்திற்கு ஊற்றி தீ வைத்து எரித்தார். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஜமால் என்பவருக்கு சொந்தமான காரின் பின்பக்க கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கார் கண்ணாடியை உடைப்பதற்கு முன் பேண்ட், ஷர்ட் அணிந்து சுற்றித் திரிந்த மர்ம நபர் வீடுகளை எட்டிப் பார்த்து நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்