மாயமான 15 வயது சிறுமி...புகார் கொடுத்ததும் கண்டுகொள்ளாத காவல்துறை...கலெக்டரிடம் கதறி அழுத பெற்றோர்
15 வயது சிறுமியை காணவில்லை என, பெற்றோர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த,
குண்டன் பூசாரியூரை சார்ந்த முருகேசன் - நல்லங்காள் தம்பதி, இந்த மனுவை அளித்தனர். அதில் தங்களது இளைய மகள் கடந்த 3 மாதமாக திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள தனியார் காட்டன் மில்லில் வேலை பார்த்து வந்ததாக கூறியுள்ளனர். கடந்த 17ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து, தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறிய தம்பதி, ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
Next Story