திருத்தணிக்கு அழைத்த முருகன்.. கிருஷ்ணகிரியில் ஒரு கிராமமே காலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், காவடி எடுத்து மஞ்சள் ஆடை அணிந்து நடைபயணமாக திருத்தணிக்கு சென்றனர். இதனால் கிராமமே வெறிச்சோடியது.
குள்ளனூர் கிராமத்தில் உள்ள பால முருகன் கோவிலில் ஆடி மாத திருக்கல்யாணம் நடப்பதற்கு முன்பு, கிராம மக்கள் விரதமிருந்து திருத்தணி முருகப்பெருமானை வணங்குவது வழக்கம். அதன்படி, விரதமிருந்து காவடி எடுத்து மஞ்சள் ஆடை அணிந்தபடி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தியுடன் திருத்தணிக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
Next Story