முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஃபயாஸுக்கு பாஸ்போர்ட் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

x

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஃபயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் வசிக்க விசா எடுக்க விண்ணப்பிக்க வேண்டி, தனது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் விசாரணையின் போது, வழக்கில் இருந்து விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஃபயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால், வேறு அடையாள் அட்டை தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்