மனநோயால் பாதிக்கப்பட்ட தம்பதி... கழுத்தறுபட்டு கிடந்த பெண் காவலர் - கொடூர கொலையின் பின்னணி என்ன?
களியாக்கவிளை அருகே, பெண் காவலர் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குமரி மாவட்டம் குளப்புறம் பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த பெண் காவலர் மினி, மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். விசாரணையில், கடந்த 2021-ல் மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த மினி, மனநோய் பாதிப்பால் விடுப்பில் சென்றதும், அவரது கணவருக்கும் மனநோய் பாதிப்பு உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்த கணவரை கண்காணிப்பில் வைத்துள்ள போலீசார், மினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story