MR விஜயபாஸ்கர் வழக்கு.. CBCID கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

x

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களை வைத்து பதிவு செய்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை கடந்த 22-ஆம் தேதி, சிபிசிஐடி போலீசார், 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.இதற்கிடையே, கொலை மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 7 நாள் காவலில் விசாரிக்க, வாங்கல் காவல் நிலைய போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால், ஒரு நாள் மட்டும் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.போலீஸ் காவல் முடிந்து, கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பும், மீண்டும்வ விசாரிக்க வாங்கல் காவல் நிலைய போலீசாரும் அனுமதி கேட்டனர்.சிபிசிஐடி கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வாங்கல் காவல் நிலைய போலீசார் மீண்டும் 1 நாள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இதற்கிடையே, மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக திருவள்ளூர் மாவட்டம், சோழபுரத்தைச் சேர்ந்த சார்லி என்ற வழக்கறிஞரை கரூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்