அண்ணனுக்கு லாக் தம்பிக்கு குட் நியூஸ்.. MR விஜயபாஸ்கர் வழக்கில் திருப்பம்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சகோதரர் எம்.ஆர். சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம், குன்னம்பட்டியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை, எம்.ஆர். ஜயபாஸ்கர்
மற்றும் அவரது ஆதரவாளர்கள், தன்னை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக பிரகாஷ் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்ததை தொடர்ந்து, அவரது முன் ஜாமீன் மனு செல்லாததாகி விட்டது எனக் கூறி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை எம்.ஆர்.சேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எம்.ஆர். சேகருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.